ஆளுமை:ஜெயக்குமார், இராஜா

From நூலகம்
Name ஜெயக்குமார்
Pages இராஜா
Birth 1969.02.08
Place யாழ்ப்பாணம், உரும்பிராய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயக்குமார், இராஜா (1969.02.08) யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர். பாடசாலை அதிபரான இவர் கலைத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவரின் ஆக்கங்கள் விக்கரமாதித்தன், மேகதூதன் என்ற புனை பெயர்களில் வெளிவந்துள்ளன.

கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். கண்மணி என்ற பெயரில் மாணவர் மாதாந்த பத்திரிகை வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் இருந்தார். உலகம் எனும் பொது அறிவு நூலையும், குப்பிளான் கலை இலக்கிய மன்றத்தினூடாக உதயம் எனும் காலாண்டு சஞ்சிகையையும் வெளியிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பல பட்டி மன்றக் குழுக்களை உருவாக்கி 1988ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இடங்களில் பட்டி மன்றங்களை நடத்தி வருகின்றார். ஊடகத்துறையில் பத்திரிகை நிரூபராகவும் கடமையாற்றியுள்ளார். கலைஞர்கள், எழுத்தாளர்களை நேர்காணல்கள் செய்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 121-122
  • நூலக எண்: 3167 பக்கங்கள் 9-14
  • நூலக எண்: 70663 பக்கங்கள் 17