ஆளுமை:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆ. மு. ஷரிபுத்தீன்

From நூலகம்
Name ஜின்னாஹ் ஷரிபுத்தீன்‎
Pages ஆ. மு. ஷரிபுத்தீன்
Birth
Place மருதமுனை
Category கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆ. மு. ஷரிபுத்தீன் மருதமுனையைச் சேர்ந்த மரபுக் கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். இவர் தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் அதன் துணைத் தலைவராகவும் சர்வதேச இஸ்லாமியக் கலைக் கழகத்தின் இலங்கைக் கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

எஸ். டி. சிவநாயகத்தின் தினபதி கவிதா பண்ணையில் அறிமுகமான இவர், பல கவிதை நூல்களையும் காப்பியங்களையும் படைத்துள்ளார். இவர் எழுதிய பண்டார வன்னியன் காவியம்" 2005 ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதினைப் பெற்றுள்ளதோடு 'பெற்ற மனம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர் தீரன் திப்பு சுல்தான் காவியம், எல்லாள காவியம், ராகுலுக்கு ஒரு புதுவண்டி போன்ற பல நூல்களை எழுதினார்.

இவரது கவியாற்றலுக்காகக் கலாபூஷணம், தமிழ் மாமணி, கவி மாமணி, காவியத் தலைவன், நற்கவிஞர், காப்பியக்கோ போன்ற கெளரவங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

Resources

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 217-219
  • நூலக எண்: 404 பக்கங்கள் 04-07