ஆளுமை:சோமசுந்தரம், வே. க.
From நூலகம்
Name | சோமசுந்தரம் |
Birth | 1919.04.30 |
Pages | 1998.12.01 |
Place | புங்குடுதீவு |
Category | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோமசுந்தரம், வே. க. (1919.04.30-1998.12.01) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் இனப்பற்று, விடுதலை உணர்வு, பொதுநல உணர்வு மிக்கவராகக் காணப்பட்டார்.
இவர் கூறிய இந்திய சுதந்திர போராட்டச் செய்திகளும் உணர்ச்சி மிக்க உரையாடல்களும் தீவகம் எங்கும் பரவியதுடன் தீவக இளைஞர்களைத் தமிழரசுக் கட்சியின் கீழ் ஒன்று சேர்த்ததால், 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தீவகத்தில் புதிய சாதனை படைத்தது. இந்த வெற்றி வே.க.சோமசுந்தரம் தந்த வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு 1925 ஆம் ஆண்டு உருவாகிய புங்குடுதீவு இளைஞர் கழகம் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் வே.க. சோமசுந்தரத்தின் தலைமையில் திறம்படச் செயலாற்றியது.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 208-210