ஆளுமை:செல்வராசா, ஞானப்பிரகாசம்

From நூலகம்
Name செல்வராசா
Pages ஞானப்பிரகாசம்
Birth
Place ஊர்காவற்துறை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசா, ஞானப்பிரகாசம் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தை ஞானப்பிரகாசம். காவலூர்க் கவிஞன் என அழைக்கப்படும் இவர், தினகரன் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றியதுடன் மறவர் வழி மான்மியம், தலபுராணம் ஆகியவற்றை எழுதியுள்ளார். கத்தோலிக்கரான இவர், "ஞானசௌந்தரி" கதையினை நாட்டுக் கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடகநூல் மிகப் பிரபல்யமானது. மேலும் இவர், நயினை நாகபூசணிக்கும் நாரந்தனை தான்தோன்றியம்மைக்கும் மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களைப் பாடியதுடன் நயினை நாக விடுதூது என்னும் தூதுப் பிரபந்தத்தை எளிய சொற்களால் இனிய சந்தத்தில் ஆக்கியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 16-17