ஆளுமை:செல்வராசன், இராசையா

From நூலகம்
Name செல்வராசன்
Pages இராசையா
Pages அழகம்மா
Birth 1952.09.18
Place மட்டக்களப்பு, திருக்கோவில்
Category கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசன், இராசையா (1952.09.18-) மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்த ஓர் கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை இராசையா; இவரது தாய் அழகம்மா. கோவிலூர் செல்வராசன் என்ற புனைபெயர் கொண்ட இவர், வெளிவாரிப் பட்டப்படிப்பின் மூலம் கலைமாணிப் பட்டம் பெற்றார். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, மெல்லிசைப்பாடல்களில் ஈடுபாடுடைய இவர், விடியாத இரவுகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் புதுக் கோலங்கள் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நடிகராகவும் இலங்கை வானொலியில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார். தினகரன் பத்திரிகையில் படகுத்துறை, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி, இளமைக் கோவில் ஒன்று ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார்.

ஒலியிழை நாடாக்களில் உகந்தை முருகன் பக்திப் பாடல்கள், திருக்கோவில் முருகன் பக்திப் பாடல்கள், பிள்ளையார் அம்மன் பாடல்கள், தேசத்தின் தென்றல் இசைத்தட்டு ஆகிய பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 177
  • நூலக எண்: 77 பக்கங்கள் 10

வெளி இணைப்பு