ஆளுமை:செல்வரத்தினம், வடிவேலு

From நூலகம்
Name செல்வரத்தினம்
Pages வடிவேலு
Birth 1947.01.26
Pages 2006.12.22
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், வடிவேலு (1947.01.26 - 2006.12.22) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை வடிவேலு. அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவில் மூத்த நாடகக் கலைஞரான அமரர் கே. வி. ஐயாத்துரை, வி. கே. இரத்தினம், வி. கே. பாலசிங்கம் ஆகியோரின் நட்டுவாங்கத்தால் நெறிப்படுத்தப்பட்ட இவர், 1965 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை இசை நாடகங்களில் புகழ் பெற்று விளங்கியவர்.

வாழ்வாதாரத்துக்குத் தச்சுத் தொழிலை மேற்கொண்டு வந்த இவர், இசை நாடக மேடைகளில் மனைவி, காதலி, சகோதரி, தாய் எனப் பெண்பாத்திரமேற்றுத் தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வி. வி. வைரமுத்துவோடு சேர்ந்து மயான காண்டம் நாடகக் காட்சியில் நடித்துள்ளதோடு, மூவாயிரம் மேடைகளுக்கு மேலாக இசை நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.

இக்கலைஞருக்கு நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவையால் கலைஞனச்சுடர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 170
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 172-173