ஆளுமை:செல்வநாயகம், சின்னத்துரை
From நூலகம்
Name | செல்வநாயகம் |
Pages | சின்னத்துரை |
Birth | 1937.02.01 |
Place | சுன்னாகம் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வநாயகம், சின்னத்துரை (1937.02.01 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர், தபால் ஊழியர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் ஐ. இராசரத்தினம், ஆ. நடராசா ஆகியோரிடம் கலைப்பயிற்சி பெற்று 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
இவர் ஔவையார், கை கொடுத்தான் விவசாயி முதலிய நாடகங்களில் முறையே புலவராகவும் விவசாயியாகவும் நடித்துள்ளார். இவர் கூப்பன் பாண் எங்கே, பாரதியின் கண்ணீர் ஆகிய நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்தமையால் தபால் மந்திரி திரு. செல்லையா குமாரசூரியர் முன்னிலையில் பரிசு பெற்றுள்ளார்.
இவரது கலைத் திறமைக்காக முனிவர், விவசாயி, வள்ளிப்பிள்ளை ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 172