ஆளுமை:செல்லையா, வயிரவப்பிள்ளை

From நூலகம்
Name செல்லையா
Pages வயிரவப்பிள்ளை
Pages சின்னப்பிள்ளை
Birth 1920.04.15
Pages 2004.03.06
Place இளவாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, வயிரவப்பிள்ளை (1920.04.15 - 2004.03.06) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர், சைவப்புலவர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை; தாய் சின்னப்பிள்ளை. இவர் 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் பெற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தை நிறுவி 1960 - 1973 காலப்பகுதிகளில் அதன் தலைவராகவும் போஷகராகவும் கடமையாற்றியுள்ளதோடு சைவ நீதிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் நாவலர் நெறியில் நால்வர், ஈழத்துச் சித்த சிரோன்மணிகள் முதலான நூல்களை எழுதினார். இவர் ஞானசிரோன்மணி போன்ற பத்திற்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 45