ஆளுமை:செல்லமுத்து, நாகர்
From நூலகம்
Name | செல்லமுத்து |
Pages | நாகர் |
Birth | 1923.02.08 |
Place | கொக்குவில் |
Category | கலைஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லமுத்து, நாகர் (1923.02.08 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை நாகர். இவர் தென்னிந்தியாவிலுள்ள சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1956 ஆம் ஆண்டு சங்கீத பூஷணம் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் பரம்பரை வழியாக இசைத்துறையில் ஈடுபாடு கொண்டதுடன் இளவயதில் இசைநாடகங்களை நடித்து வந்ததோடு, சங்கீத பூஷணம் பே.சந்திரசேகரத்துடன் இணைந்து ஐம்பது தடவைகளுக்கு மேல் சங்கீதக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளில் இருபது தடவைகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 7571 பக்கங்கள் 81