ஆளுமை:செல்லத்துரை, கு. வி.

From நூலகம்
Name செல்லத்துரை
Birth
Pages 1973.02.07
Place புங்குடுதீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, கு. வி. ( - 1973.02.07) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், பேச்சாளர். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியதோடு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார்.

புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராக இருந்த இவர், நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்துச் சமயப் பணிகளை ஆற்றி வந்தார். இவர் 1960 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவுக் கிளைத் தலைவராகக் கடமையாற்றியதுடன் பல அரிய பாட நூல்களை எழுதியதோடு, ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 184