ஆளுமை:செய்கு முஸ்தபா

From நூலகம்
Name செய்கு முஸ்தபா
Birth 1836
Pages 1888.07.25
Place பேருவளை
Category மதத்தலைவர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி (1836 - 1888.07.25) களுத்துறை, பேருவளையைச் சேர்ந்த மதத்தலைவர், கவிஞர். தனது 12 ஆவது வயதில் கல்வியைத் தொடருவதற்கு இந்தியாவின் காயல்பட்டினம் சென்ற இவர், அங்கு தப்ஸீர் (அல்-குர்ஆன் விளக்கவுரை), ஹதீஸ், பிக்ஹ் போன்ற இஸ்லாமியக் கல்வியைப் பெற்றுப் பின்னர் மக்கா நகருக்குச் சென்று அங்கு புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் (கஹ்பா பள்ளிவாசல்) இமாமான செய்குல் இஸ்லாம் முப்தி ஸைனி தெஹ்லான் றஹ்மதுல்லாஹி அலைஹியிடம் கல்வி கற்றார்.

தனது கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இவர், இலங்கையில் தனது சன்மார்க்கப் பணியினைத் தொடர்ந்தார். இவர் பத்குர் ரஹ்மா பி தர்ஜிமதில் குர்ஆன் (அரபுத் தமிழில் எழுதப்பட்ட உலகின் முதலாவது புனித அல்குர்ஆன் விளக்கவுரை நூல்), மீதான் மாலை, பவாரிகுல் ஹிதாயா, பாகியாதுஸ் ஸாலிஹாத் ஆகிய நூல்களை இயற்றினார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 136


வெளி இணைப்புக்கள்