ஆளுமை:செந்தில்மதி, பரமசிவராஜா

From நூலகம்
Name செந்தில்மதி
Pages வைத்தியலிங்கம்
Pages குமரேஸ்வரி
Birth 1954.12.31
Place உரும்பிராய், யாழ்ப்பாணம்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்தில்மதி, பரமசிவராஜா (1954.12.21) யாழ் மாவட்டம் உரும்பிராயில் பிறந்த இசைக்கலைஞர். இவரின் தந்தை வைத்தியலிங்கம்; தாய் குமரேஸ்வரி. சென்னை தமிழ்நாடு இசைக்கல்லூரியில் இசைபயின்று சங்கீத வித்துவான் பட்டம் பெற்றவர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் பயிற்சி பெற்றவர். அத்துடன் உளவியல் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார். இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு மேலாகப் கலைப்பணி செய்து வருகிறார். வீணைமருத கலையகம் என்னும் ஒரு கலைக்கல்லூரியை நடத்தி வரும் இவர் வவுனியாவில் முதன் முதலில் தனது மாணவியின் வீணை அரங்கேற்றம் நிகழ்வினை நிகழத்தியவர். வீணையுடன் உளவியல் வளவாளராகவும் சமூகப் பணி செய்கின்றார்.

விருதுகள்

வட மாகாணசபை முதலமைச்சர் விருது

இந்து கலாசார அமைச்சு கலாபூஷண விருது