ஆளுமை:செந்திநாத ஐயர், சிந்நய ஐயர்

From நூலகம்
Name செந்திநாத ஐயர்
Pages சிந்நய ஐயர்
Pages கௌரி அம்மையார்
Birth 1848.10.02
Pages 1924.05.05
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்திநாத ஐயர், சிந்நய ஐயர் (1848.10.02 - 1924.05.05) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிந்நய ஐயர்; தாய் கௌரி அம்மையார். இவர் புன்னாலைக்கட்டுவன் கதிர்காமையரிடம் தமிழையும் சைவத்தையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்தார். 1872 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை ஆங்கில வித்தியாசாலையிலும் 1882 இல் இந்தியாவில் திருநெல்வேலியிலுள்ள சைவப்பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1883 இல் 'கஜனமனோரஞ்சனி' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி 1888 முதல் 1898 ஆம் ஆண்டு வரை காசியில் வசித்து வந்தமையால் காசி வாசி செந்திநாதையர் என அழைக்கப்பட்டார்.

வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர், அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் என்ற ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி அதனை விளக்குவதற்காக இவர் நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதியுள்ளார். பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு), கந்தபுராண நவநீதம், சிவஞானபோத வசனாலங்காரதீபம், சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் போன்ற நூல்களை எழுதியுள்ள இவருக்குச் 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து இவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 98 பக்கங்கள் 01-39
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 164-176
  • நூலக எண்: 963 பக்கங்கள் 132-135
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 87