ஆளுமை:செகராசசேகரன்

From நூலகம்
Name செகராசசேகரன்
Birth 1380
Pages 1414
Place யாழ்ப்பாணம்
Category மன்னர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செகராசசேகரன் (1380- 1414) யாழ்ப்பாணத்தில் நல்லூரை ஆட்சி செய்த மன்னர். ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்ற நூலின் படி சிங்கைச் செகராசசேகரனது ஆட்சிக்காலம் 1380-1414 ஆகும். கனகசூரிய சிங்கை ஆரிய மன்னரின் புதல்வரான இவர் பரராசசேகர மன்னரின் சகோதரனாவான். யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் அமைத்துச் செயற்படுத்திய இவர் அழிவுற்ற சரஸ்வதி மகாலயத்தைப் புதுப்பித்து நடாத்தி வந்தான்.

இவர் தட்சிண கைலாய புராணம் என்னும் நூலினை இயற்றியுள்ளார். இவர் காலத்தில் எழுந்த நூல்கள் இவரது பெயரில் வெளியாகியுள்ளன. சோம ஐயர் என்பவர் செகராசசேகர மாலை என்னும் சோதிட நூலினை இவர் பெயரிற் பாடியுள்ளார். செகராசசேகரம், பரராசசேகரம், அங்காதிபாதம் போன்ற வைத்திய நூல்களும் இவர் காலத்தில் தோற்றம் பெற்றன. இம்மன்னன் காலத்தில் பண்டிதராசர் என்னும் புலவரும் தக்‌ஷண கைலாச புராணம் என்னும் புராணத்தை இயற்றியுள்ளதாக அறியக்கிடக்கின்றது. செகராசசேகரனால் 632 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட தக்கிண கைலாச புராணம் அரசகேசரியின் பாயிரத்தைக் கொண்டுள்ளதாய் அமைந்துள்ளது.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 9-11
  • நூலக எண்: 100 பக்கங்கள் 17
  • நூலக எண்: 963 பக்கங்கள் 131-132

வெளி இணைப்புக்கள்