ஆளுமை:சூசைப்பிள்ளை, யோசப்

From நூலகம்
Name சூசைப்பிள்ளை
Pages யோசப்
Birth 1911.04.27
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சூசைப்பிள்ளை, யோசப் (1911.04.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை யோசப். இவர் இலங்கை சின்னப்பா என அறியப்பட்டார். இவர் கோவிந்தக்குட்டி, ஏசா போன்றோரிடம் நாட்டுக்கூத்து, இசை நாடகம் போன்றவற்றைப் பயின்று 1923 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.

இவர் திருஞானதீபன், ஞானசௌந்தரி, புனிதசீலி, அருள்மணி, யூதகுமாரன் ஆகிய 15 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவரது நாடகங்கள் தாளையடி, இளவாலை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன. மேலும் இவர் 1968 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் அண்ணாவியாராகக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 169