ஆளுமை:சுப்பன், சுகுணதேவன்

From நூலகம்
Name சுப்பன்
Pages சுகுணதேவன்
Pages சின்னம்மா
Birth 1957.07.01
Place கிளிநொச்சி, வண்ணாங்கேணி வடக்கு
Category ஆர்மோனியக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பன், சுகுணதேவன் (1957.07.01 - ) கிளிநொச்சி, வண்ணாங்கேணி வடக்கைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை சுகுணதேவன்; தாய் சின்னம்மா. 1992 இல் பருத்தித்துறை நல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற காத்தவராயன் கூத்தில் இவர் ஆர்மோனியம் வாசித்ததிலிருந்து ஆர்மோனிய கலைஞராக செயல்படத் தொடங்கினார். 1996, 1997 ஆம் ஆண்டளவில் கிளாலி வீரபத்திரர் ஆலயத்தில் ஆர்மோனியம் வாசித்தார். 2003 எழுதுமட்டுவாள் நாச்சிமார் கோவில் ,வட்டக்கச்சி இராமநாதபுரம் அம்மன் கோவில் , வட்டுக்கோட்டை அம்மன் மற்றும் காளி கோயில் ஆலயங்களில் காத்தவராயன் கூத்துக்கு ஆர்மோனியம் வாசித்துள்ளார்.

வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்துடன் சேர்ந்து கலை வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது