ஆளுமை:சுந்தரலிங்கம், செல்லப்பா

From நூலகம்
Name சுந்தரலிங்கம்
Pages செல்லப்பா
Birth 1940.07.07
Place திருநெல்வேலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், செல்லப்பா (1940.07.07 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. சிறுவயது முதல் நாடகத்துறையில் ஆர்வம் மிக்கவராக விளங்கிய இவர், 1978 ஆம் ஆண்டு நாடக அரங்கக்கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்றார்.

இவர் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் கலைப்பணி ஆற்றியுள்ளார். இவரது பொறுத்தது போதும் என்னும் நாடகம் நுவரெலியா போதனாப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டு சிறந்த நாடகமாகத் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடித்த கூடி விளையாடு பாப்பா என்னும் நாடகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன், நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டது. அத்தோடு உயிர்த்த மனிதனின் கூத்து என்ற நாடகம் இலங்கையின் பல பாகங்களில் மேடையேற்றப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 162