ஆளுமை:சுந்தரம்பிள்ளை, நடராசா

From நூலகம்
Name சுந்தரம்பிள்ளை
Pages நடராசா
Birth 1933.10.20
Place அராலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரம்பிள்ளை, நடராசா (1933.10.20 - ) யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகவும் நீராவியடியை வாழ்விடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை நடராசா. இவர் இலக்கிய விமர்சன நூல்கள், இலக்கிய வழிகாட்டல், நாடக நூல்கள், நாவல்கள், கற்பித்தல் நுல்கள் எனப் பல நூல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் கலைமாணி, கல்வியியல் டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதுவரை நாடகங்கள் ஐந்நூறு வரை எழுதியுள்ள இவர் பன்னிரண்டு நாடகங்களை நூலுருவாக்கியுள்ளார். இலக்கிய விமர்சன நூல்கள் நான்கினையும் இலக்கியம் படைக்க வழிகாட்டும் நூல்கள் மூன்றினையும் இலக்கியம் கற்பிக்க வழிகாட்டும் நூல்கள் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவை நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் 2000 ஆம் ஆண்டு முதலாம் பரிசும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், தேசிய ஒருங்கிணைப்புச் செயலகத்திட்டப் பணியகமும் ஒருங்கிணைந்து 1998 ஆம் ஆண்டு நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் முதலாமிடமும் கிடைத்தது.

”முதலாம்பிள்ளை”, எங்கள் நாடு”, ”இமயம்” ஆகிய நாடக நூல்களுக்கு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பரிசில்கள் இவருக்குக் கிடைத்தன. இவர் இமயம் நாடக நூலுக்கு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசு பெற்றதுடன் 2007 ஆம் ஆண்டு இலங்கை வடமாகாண சபையின் ஆளுனர் விருதையும் 2001 ஆம் ஆண்டு இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலாபூஷணம்” விருதையும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 18-24
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 45
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 23
  • நூலக எண்: 10162 பக்கங்கள் 03-04