ஆளுமை:சுகந்தினி, நேசராசா

From நூலகம்
Name சுகந்தினி
Pages கேசவன்
Pages சந்திராதேவி
Birth
Place யாழ்ப்பாணம்
Category விளையாட்டு வீராங்கனை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகந்தினி, நேசராசா யாழ்ப்பாணத்தில் பிறந்த விளையாட்டு வீராங்கனை. தற்போது மன்னார் கலிமோட்டை புளியங்குளத்தில் வசித்துவருகின்றார். இவரது தந்தை செல்லையா கேசவன் தாய் சந்திராதேவி. பாடசாலைக் காலத்தில் இருந்து குண்டஎறிதல், ஈட்டி எறிதல்,தட்டுஎறிதல் போன்றவற்றில் இருந்த ஆர்வத்தால் பாடசாலைமட்டம், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வெற்றிக்கேடயங்களையும் பெற்றுள்ளார்.

யுத்தத்தில் தனது ஒரு காலை தொடைப்பகுதியுடன் இழந்தாலும் தொடர்ந்து பொய்க்காலுடன் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தவாறு இருந்தார். தனது தோழிகளின் ஊக்குவிப்பால் மைதானத்தில் பயிற்சிக்காக இறங்கினார். கணவரினதும் தோழிகளினதும் ஊக்குவிப்பால் 2017 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு ஈட்டிஎறிதல், குண்டு எறிதல், தட்டுஎறிதல் ஆகியவற்றில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவரது பயிற்சிகாக மன்னார் மாவட்ட சமூக நிறுவனங்கள், மாதர் சங்கங்கள் உதவிவருவது குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக 3முறை தங்கப்பதக்கத்தைப் பெற்றள்ளதுடன் 2013ஆம் ஆண்டு சர்வதேச பரா தடகள போட்டியில் சம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றுத்தினாளியாக இருந்து சாதனை புரிந்து வருகிறார்.

வெளி இணைப்புக்கள்