ஆளுமை:சீவகாருணியம், கணபதிப்பிள்ளை
From நூலகம்
Name | சீவகாருணியம் |
Pages | கணபதிப்பிள்ளை |
Birth | 1929.06.14 |
Place | கொக்குவில் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சீவகாருணியம், கணபதிப்பிள்ளை (1929.06.14 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. பாரம்பரிய நாடக மரபுகளைப் பேணிப் பாதுகாத்து வரும் இவர், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் கடமையாற்றி வந்துள்ளார். பண்டைய கலாச்சார விழுமியங்களையும் கலைப்பண்பாட்டையும் நாடகங்கள் மூலம் கட்டிக் காத்து அடுத்த தலைமுறையினருக்குக் கையளிப்பதே கலைத்துறைக்குச் செய்யும் பெரும் சேவையாகக் கருதி வந்துள்ளார்.
இவரது கலைப் பணிக்காக இலங்கை கலாச்சார அமைச்சர் கலாபூஷணம் என்னும் கௌரவ விருதை இவருக்கு வழங்கியுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 166