ஆளுமை:சிவராஜா, முருகேசு

From நூலகம்
Name சிவராஜா
Pages முருகேசு
Pages சிவபாக்கியம்
Birth 1955.03.27
Pages 2006.04.21
Place வற்றாப்பளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராஜா, முருகேசு (1955.03.27 - 2006.04.21) முல்லைத்தீவு, வற்றாப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு; தாய் சிவபாக்கியம். வற்றாப்பளை உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் இளமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது என் சித்தப்பா, போர்க்காற்று, நிர்வாண விழிகள் ஆகிய கவிதை நூல்களும் குங்குமம், புதிய அலைகள் ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன. 1986 இல் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த இவர் 1995 ஜனவரியிலிருந்து 1996 ஜனவரி வரை காகம் என்ற மாதச் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 400 பக்கங்கள் 52