ஆளுமை:சிவபாலன், கதிரவேலு

From நூலகம்
Name சிவபாலன்
Pages கதிரவேலு
Birth 1950.02.10
Pages 2005.03.04
Place அச்சுவேலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலன், கதிரவேலு (1950.05.10 - 2005.03.04) யாழ்ப்பாணம்,கரம்பன், அச்சுவேலியைச் சேர்ந்த சங்கீதக் கலைஞர். இவரது தந்தை கதிரவேலு. இவர் P.A.S. ராஜசேகரனிடம் நான்கு வருடங்கள் பண்ணிசையை முறையாகப் பயின்று 'திருமறைப் பண்ணிசைமணி' என்னும் பட்டத்தைப் பெற்றார். 1982 இல் தமிழகம் சென்று பட்டப்படிப்புக்களை நிறைவு செய்து தமிழ்நாடு அரச இசைக்கல்லூரியின் விரிவுரையாளராகவும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல ஒலிப்பதிவு நாடாக்களில் திருமுறைப்பாடல்களைப் பாடி வெளியிட்டும் பல அரிய இசை ஆராய்ச்சி நூல்களை எழுதியும் இசைத்துறைக்குப் புத்துயிர் அளித்தவர். இவர் சாகித்திய மண்டலப் பரிசில்களையும் இருபத்தொன்பது விருதுகளையும் மூன்று தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 571
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 62