ஆளுமை:சிவபாதம், நமசிவாயம்

From நூலகம்
Name சிவபாதம்
Pages நமசிவாயம்
Birth 1932.12.05
Place அச்சுவேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதம், நமசிவாயம் (1932.12.05 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நமசிவாயம். இவர் 1947 ஆம் ஆண்டில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் படித்துப்பார் என்னும் பொது அறிவு சார்ந்த நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து புத்தொளி மலர்ச்சி, மொழியும் நாடும், மிதிலைச் செல்வி, அப்பலோ, மலர்க தமிழீழம், நாளை நமதே, கட்டுரைக் கதம்பம், தமிழர் தலைமகள், ஜீ.ஜீ' தமிழ்த்தாயின் கண்ணீர், தமிழர் செல்வம், செல்வா, தூக்கில் பக்த்சிங், ஆசிரியருக்கு ஆசான், சைவத் திருமண முறைகள் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார்.

1951 ஆம் ஆண்டில் தேசாபிமானியில் பலிபீடம் என்னும் இவரது முதற் சிறுகதை வெளிவந்தது. மேலும் இவர் பானுவின் திருமணம், வீரத்தமிழ் நங்கை, தரகர் வேலுப்பிள்ளை அம்மான், கலேஜ் காதல், சீதனமே ஆகிய சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளார். இவருக்குச் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையால் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 19-20