ஆளுமை:சிவஞானப்பிரகாசம், இராசலட்சுமி

From நூலகம்
Name இராசலட்சுமி
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவஞானப்பிரகாசம், இராசலட்சுமி யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த எழுத்தாளர் . நீண்டகாலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். சாயிசசி என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான இவர் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்க அலுவலகத்தில் வரியியல் சட்ட வல்லுனராகப் பணியாற்றுகின்றார். சிறுவயதில் இருந்தே தமிழ் மேல் கொண்ட காதலினால் மேடைப் பேச்சுக்கள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டுள்ளார். மனோன்மணியம் என்னும் தமிழ் இலக்கிய நாடகத்தை இயக்கிக் கல்லூரியில் முக்கிய வைபவங்களில் மேடையேற்றியுள்ளார். இவரின் ஆக்கங்கள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அதிலும் இவரின் ”தேவரிஷி நாதர் சித்த கலைக்கோயில்” என்ற உருவகக் கதை அனைவராலும் பாராட்டப்பட்டது. தந்தப்பேழை என்னும் குறுநாலுடன் பல நெடுங்கதைகளும் சிறுகதைகளும் நூலில் அடங்கியுள்ளன. இலக்கிய நயம் மிக்க இவரின் ஆக்கங்கள் இறை நம்பிக்கையையும் கொண்டதாகக் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

படைப்புகள்

  • தந்தப்பேழை (குறுநாவல்)

Resources

  • நூலக எண்: 2612 பக்கங்கள் 45-50
  • நூலக எண்: 2614 பக்கங்கள் 35-43, 47