ஆளுமை:சிவசோதி, கே.ஆர்

From நூலகம்
Name சிவசோதி
Pages இரத்தினசிங்கம்
Pages பார்வதி
Birth 1948.11.02
Place வவுனியா
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசோதி, கே.ஆர் (1948.11.02) வவுனியாவில் பிறந்த கலைஞர். இவரது தந்தை இரத்தினசிங்கம் ஒரு பாலபண்டிதர்; தாய் பார்வதி. ஒரு சங்கீத ஆசிரியர். தனது ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்திலும் புங்குடுதீவு சங்கீத பூஷணம், பொட்டு கந்தசாமி ஆசிரியரிடம் தனது சங்கீதக் கல்வியினைப் பயின்று பின்னர் பொன்.நடராஜன் ஆசிரியரிடம் கல்வி கற்றார்.

1970ஆம் ஆண்டில் இருந்தே மேடைகளில் ஒரு பாடகராக தனது இசைப் பயணத்தினை தொடங்கினார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் 1974-1975ஆம் ஆண்டு காலப் பகுதியில் விசேட ஆசிரிய தராதர பயிற்சிக் காலத்தில் கர்நாடக சங்கீதத்தினை வீரமணி ஐயர், பொன்.முத்துக்குமாரு ஆகியோரிடம் பயின்று அதிதிறமைச் சித்தியினைப் பெற்றுக்கொண்டார்.

நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த செல்வி அற்புதமலரை திருமணம் புரிந்து கொண்ட சிவசோதிக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. ஆசிரியராக பல பாடசாலைகளில் கடமையாற்றிய இவர் 1988ஆம் ஆண்டு ஓமந்தை நொச்சிக்குளம் பாடசாலையில் அதிபராக பதவி உயர்வு பெற்று சமளங்குளம் தமிழ் வித்தியாலத்தில் 1990ஆம் ஆண்டு முதல் அதிபராகக் கடமையாற்றி 1993ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

1981ஆம் ஆண்டு இவரது நான்கு மெல்லிசைப்பாடல்கள் இலங்கை வானொலியில் சேர்க்கப்பட்டன. இலங்கையில் பல்வேறு மேடைகளில் கண்ணன் இசைக்குழுவினருடன் இணைந்து பாடியுள்ளார். நாடகங்களுக்கு பின்னணி பாடியும் இசையமைத்தும் பணி புரிந்துள்ளார். திரு.அருள் வரதராஜன் இயற்றிய மலராத வாழ்வு, வாழப் பிறந்தவன், சச்சா செல்வராஜன் இயக்கிய நீரோட்டம் ஆகிய நாடகங்களுடன் இசை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் இசைக்குழு அமைத்துப் பல்வேறு கோயில்கள், இசைவிழாக்கள் என்பவற்றில் பாடியதுடன் பல இசை நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபட்டும் இசைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியும் இசைக்கல்வியை வழங்கியும் இசைப்பணி புரிந்ததோடு நகரசபை சுற்றாடல் பாதுகாப்புக்குழுத் தலைவராகவும், ஆசிகுளம் பிரஜகள் குழுச் செயலாளராகவும், சமாதானக்குழுச் செயலாளராகவும் சமூக பணிகளையும் ஆற்றியுள்ளார்.

விருதுகள்

தமிசைமாமணி விருது – 1991ஆம் ஆண்டு

இசைமணி விருது

இசைஎழில் – 1998 வவுனியா நகரசபை

கலாபூஷணனம் விருது – கலாசார அமைச்சு

இசைச்செல்வர் விருது – வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்

Resources

  • நூலக எண்: 1898 பக்கங்கள் 41-42