ஆளுமை:சிவகுகன், ஆரபி

From நூலகம்
Name ஆரபி
Pages சிவஞானராஜா
Birth 1981.07.15
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுகன், ஆரபி (1981.07.15) யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை சிவஞானராஜா. முதுபெரும் புலவர் அமரர் வை.சி.சிற்றபம்பலம் அவர்கள் இவரின் தந்தைவழி பாட்டனார் ஆவார். ஆரபி அந்த பரம்பரையில் வந்த மூன்றாம் தலைமுறை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். கவிதை, சிறுகதைகளை எழுதுவதன் ஊடாக பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை எழுதும் இவரின் திறமை காரணமாக பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு நற்பெயரையும் ஈட்டிகொடுத்துள்ளார். பாடசாலையில் கற்கும் காலத்திலேயே 2009ஆம் ஆண்டு கரைதேடும் அலைகள் என்னும் முதலாவது சிறுகதையை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தேயாத நிலவுகள் என்னும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையில் வெளியாகும் சஞ்சிகைகளிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கிறது.


படைப்புகள்

  • கரைதேடும் அலைகள் (சிறுகதைத் தொகுதி)
  • தேயாத நிலவுகள் (சிறுகதைத் தொகுதி)