ஆளுமை:சிவகாமி, ஜெயக்குமார்

From நூலகம்
Name சிவகாமி
Pages சுப்பிரமணியம்
Pages சின்னம்மா
Birth 1972.04.23
Pages 2015.10.18
Place பரந்தன்
Category எழுத்தாளர்,போராளி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகாமி, ஜெயக்குமார் கிளிநொச்சி பரந்தனில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் சின்னம்மா. பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். விடுதலைப்புலிகளின் மகளிர் அணி அரசியல் பிரிவுத் தலைவியாக இருந்த இவர் தமிழினி எனும் பெயராலேயே அறியப்பட்டுள்ளார். தமிழினி ஈழப்போராட்டத்தில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் பின்னர் அகதி முகாமில் இருந்த தமிழினி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையின் பின்னர் ஒரு வருடம் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு விடுதலையானார். இயக்கச் செயற்பாடுகளில் இருந்த போதே நாடக பிரதியாக்கம் செய்து நாடகங்களை வடிமைத்துள்ளார். அத்தோடு கட்டுரை, கவிதை, கதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர். இவரின் ஆக்கங்கள் வீடுதலைப்புலிகளின் சுதந்திரப்பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் ஆகியவற்றில் வெளிவந்தன. சிறையில் இருந்த காலங்களிலும் தனது எழுத்தை நிறுத்தாமல் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டார் தமிழினி. போராளியாக செயற்பட்ட தமிழினி பெண்களுக்கான பல செயற்றிட்டங்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார். பெண்களால் நடத்தப்பட்ட தும்புத் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பண்ணை என்பவற்றுக்கு பொறுப்பாகவும் இவர் செயற்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் பெண்கள் சஞ்சிகையான சுதந்திர பறவைகளின் ஆசிரியர் பீடத்தின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். ஓர் கூர்வாளின் நிழலில் என்னும் இவரின் நூல் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகள்


வெளி இணைப்புக்கள்