ஆளுமை:சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை

From நூலகம்
Name சின்ன ஆலிம் அப்பா
Pages இப்ரகீம் லெப்பை
Pages சூறைப்பாத்தும்மா
Birth
Place மருதமுனை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இப்ரகீம் லெப்பை; இவரது தாய் சூறைப்பாத்தும்மா. இவர் தமிழிலும் அரபுமொழியிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கினார். இந்தியாவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பிய இவர் ஆலிம் (மதப் பேரறிஞர்) ஆகித் தொண்டுகள் புரிந்தார்.

இவர் ஞானரை வென்றான் என்னும் நூலினை இயற்றியுள்ளார். இந்நூல் மருதமுனை ஆசிரியர் சங்கத்தினரால் அச்சேற்றி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல் செய்து இவர் பாடிய பாடல்கள் மழைக் காவியம் என்னும் பெயருடன் தொகுக்கப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 119-120