ஆளுமை:சின்னராசா, பண்டாரம்
Name | சின்னராசா |
Pages | பண்டாரம் |
Birth | 1934.07.18 |
Place | மயிலிட்டி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னராசா, பண்டாரம் (1934.07.18 - ) யாழ்ப்பாணம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை பண்டாரம். எஸ். எஸ். சி. இல் தமிழிலும் ஆங்கிலத்திலும் சித்தியடைந்த இவர், ஆரம்பத்தில் வித்துவான் தம்பிராசாவிடமும் பின்னர் 08 வருடங்களாக ஏ. எஸ். ராமநாதனிடமும் மிருதங்கக் கலையைப் பயின்று தனது 12 ஆவது வயதிலிருந்து மிருதங்கம் இசைத்து வந்துள்ளார்.
இவர் கோப்பாய் ஆசிரியக் கலாசாலையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பரீட்சைப் பரிசோதகராகவும் கடமையார்றியுள்ளதோடு வட இலங்கை சங்கீத சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறைப் பரீட்சகராகவும் இணுவில் இசைத்தொண்டர் சபையில் மிருதங்க ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் விநாயகர் மகத்துவம், பல்லவி அமுதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவர் தனது ஆளுமைக்காகக் கலாபூஷணம், மத்தளக்கலைச்சுடர், கலாவித்தகர், லயஞானசுரபி, லயஞானபானு, கலைஞானகேசரி, சங்கீத ரத்தினம், கலாபமணி, கலைச்சுடர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 103