ஆளுமை:சின்னத்துரை, நாகமுத்து
Name | சின்னத்துரை |
Pages | நாகமுத்து |
Birth | 1926.10.04 |
Place | கோண்டாவில் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்துரை, நாகமுத்து (1926.10.04 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை நாகமுத்து. இவர் நாதஸ்வரம், புல்லாங்குழல், ஆர்மோனியம் ஆகிய இசைக் கருவிகளை இசைக்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கியதோடு நாதஸ்வரக் கலைஞனாக நீண்ட காலம் செயற்பட்டார்.
கோவலன் கண்ணகி, அல்லி அர்ச்சுனா, பவளக்கொடி, ஶ்ரீ வள்ளி, சத்தியவான் சாவித்திரி, பொன்னிரவு, எம்பரத்தோர், ஏகலைவன், அனுபுத்திரன், குசலவன், தாடகை வதம் ஆகியவை இவர் நடித்த கூத்துக்களில் முக்கியமானவை ஆகும். பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் 1998 ஆம் ஆண்டு நடத்திய கூத்துப் போட்டியில், இவர் நட்டுவாங்கம் செய்த பவளக்கொடி கதைவழிக்கூத்து பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவரின் கலைத்திறனைப் பாராட்டிப் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியன பொன்னாடை போர்த்தி, முடிசூட்டிக் கௌரவித்துள்ளதோடு நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை 2005 ஆம் ஆண்டு கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
Resources
- நூலக எண்: 7571 பக்கங்கள் 154