ஆளுமை:சின்னத்தம்பி, இராமநாதர்

From நூலகம்
Name சின்னத்தம்பி
Pages இராமநாதர்
Birth 1934.02.26
Pages 2013.03.16
Place நெடுந்தீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி, இராமநாதர் (1934.02.26- 2013.03.16) நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை இராமநாதர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்.

இவர் தான் கற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அதிபராகவும் நெடுந்தீவுப் பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணிபுரிந்தார். பின்னர் நெடுந்தீவுப் பிரதேசப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

நெடுந்தீவு கிராம சபையின் விஷேட ஆணையாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். அத்தோடு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 146-147