ஆளுமை:சின்னச்சாமி, நாகலிங்கம்

From நூலகம்
Name சின்னச்சாமி
Pages நாகலிங்கம்
Birth 1914.10.21
Place சாவகச்சேரி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னச்சாமி, நாகலிங்கம் (1914.10.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். யாழ்ப்பாண அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், சிற்ப அனுபவங்களை இந்தியா சென்று நாராயணசுவாமியிடம் கற்றார்.

சாவகச்சேரி சிவன் கோவில், கொழும்பு கொட்டாஞ்சேனை முத்துமாரி அம்மன் கோவில், மட்டக்களப்பு சித்தாண்டிப் பிள்ளையார் ஆலயம், நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில், கோட்டை முனியப்பர் ஆலயம், வண்ணார்பண்ணை சிவன் ஆலயம், வவுனியா முருகன் ஆலயம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மீசாலை வெள்ளைமாவடிப் பிள்ளையார் ஆலயம் போன்றவற்றில் தனது சிற்பக் கலையை வெளிக்காட்டியுள்ளார். இவர் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இவர் சிற்ப சக்ரவர்த்தி, கலைமாமணி ஆகிய பட்டங்களை 1999 இல் மீசாலை இராமாவில் கந்தசாமி ஆலய பரிபாலன சபையால் பெற்றுக் கொண்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 243