ஆளுமை:சிதம்பரேஸ்வரன், நல்லையா

From நூலகம்
Name சிதம்பரேஸ்வரன்
Pages நல்லையா
Birth 1952.03.07
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரேஸ்வரன், நல்லையா (1952.03.07 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. இவர் எஸ். எம். நடராசா, எஸ். நவரத்தினம், கலைமணி எஸ். வடிவேல் ஆகியோரிடம் கல்வி கற்று 1960 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார்.

1968 ஆம் ஆண்டிலிருந்து கண்ணகி வழக்குரைத்தல், மந்தரை சூழ்ச்சி, கவரி வீசிய காவலன் ஆகிய நாடகங்களுக்கு ஒப்பனையும் நெறியாள்கையும் செய்துள்ளார். அத்துடன் மார்க்கண்டேயர், இராவணேஸ்வரன் ஆகிய நாடகங்களும் இவரால் மேடையேற்றப்பட்டன. இவர் சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான காண்டம் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 2008 ஆம் ஆண்டில் வலிகாமம் தெற்குக் கலாச்சாரப் பேரவையால் ஞானஏந்தல் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 159