ஆளுமை:சிதம்பரப்பிள்ளை

From நூலகம்
Name சிதம்பரப்பிள்ளை
Birth 1931.05.25
Pages 2009.06.23
Place கரவெட்டி
Category கூட்டுறவாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரப்பிள்ளை, த. (1931.05.25 - 2009.06.23) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கூட்டுறவாளர். இவர் யாழ்ப்பாணம் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாசாலையிலும் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் கணிதத்தில் விசேட ஆசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். இவர் மன்னார், நெடுந்தீவு, பொலிகண்டி, நெல்லியடி ஆகிய இடங்களில் கணித ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் மறையும் வரை தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் கூட்டுறவுத்துறை சார்ந்து பணியாற்றினார். கட்டைவேலி, நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் முன்னேற்றத்துக்காக உழைத்தார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 36-37
  • நூலக எண்: 4175 பக்கங்கள் 05