ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, ஆறுமுகம்

From நூலகம்
Name சிதம்பரப்பிள்ளை
Pages ஆறுமுகம்
Birth 1908.06.16
Place கரவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரப்பிள்ளை, ஆறுமுகம் (1908.06.16 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் எஸ். எஸ். சி. வரை கல்வி கற்றுள்ளதுடன் அண்ணாவியார் இராமுவிடம் நாடக உத்திகளைக் கற்று, 1930 இல் தனது கல்வி அறிவினாலும் கலைத்துறை ஈடுபாட்டாலும் சுயமாக நாடகங்களை எழுதியும் மற்றவர்களுக்குப் பழக்கியும் வந்துள்ளார்.

இவர் கண்டியரசன், ஆட்டக்கார வேலன், காளிதாசர், ஏழுபிள்ளை நல்லதங்காள் ஆகிய நாடகங்களை இயற்றியுள்ளதோடு வள்ளி திருமணம், காத்தவராயன், கோவலன் கண்ணகி, நந்தனார், அரிச்சந்திரன் போன்ற பல நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளார். இவரது நாடகங்கள் மட்டக்களப்பு, குச்சவெளி, தம்பலகாமம், மன்னார், முல்லைத்தீவு, மாங்குளம் ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டன. மேலும் இவர் ஆஸ்பத்திரி முன்னாலே அவளும் நானும் பின்னாலே அவள் இருப்பது துன்னாலே, பப்பள பளபள பப்பாளித் தோட்டம் படுத்த பாயேம் சுருட்டிக்கொண்டு எடுத்தேனே ஓட்டம் அக்கே போன்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இவரது சேவைக்காக இவர்வரகவி, நடிகரத்தினம் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 158-159