ஆளுமை:சிதம்பரநாதன், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name சிதம்பரநாதன்
Pages வேலுப்பிள்ளை
Birth 1948.05.11
Place அல்வாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1948.05.11 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது 13 ஆவது வயதிலிருந்து இசை, நாடகம், சிற்பம், கிராமியக் கலை போன்ற துறைகளின் மூலம் கலைச்சேவையை ஆற்றத் தொடங்கி க. செல்லத்துரை, ந. வெங்கையா, ஈ. செல்லையா, மு. நாகலிங்கம் ஆகியோரிடம் கலைப்பயிற்சி பெற்றார்.

இவர் மார்க்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி, சம்பூர்ண அரிச்சந்திரா, ஶ்ரீ வள்ளி போன்ற நாடகங்களைப் பழக்கி நடித்துள்ளதோடு இலங்கை வானொலியில் பல சந்தர்ப்பங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக இவருக்கு 1922 ஆம் ஆண்டில் இளங் கலைஞர் பட்டமும் 1997 ஆம் ஆண்டில் இளங் கலைவேந்தன் பட்டமும் 2002 ஆம் ஆண்டில் மரபுக் கலைச்சுடர் பட்டமும் 2003 ஆம் ஆண்டில் இசைநாடக கேசரி பட்டமும் 2005 ஆம் ஆண்டில் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் பட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 158