ஆளுமை:சற்குருநாதன், தம்பு

From நூலகம்
Name சற்குருநாதன்
Pages தம்பு
Birth 1941.12.31
Place ஏழாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சற்குருநாதன், தம்பு (1941.12.31 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் வயலின் வித்துவான் சித்திவிநாயகம், வி. தே குமாரசாமி, இணுவையூர் இராதா கிருஷ்ணன் ஆகியோரிடமும் ஆர்மோனியத்தை நடிகைமணி வைரமுத்துவிடமும் சங்கீதத்தை சங்கீதபூஷணம் கந்தையா, ஶ்ரீரங்கநாதன் ஆகியோரிடமும் பயின்று 1961 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றத் தொடங்கினார்.

இவர் பூஞ்சோலை, பணம் இருந்தும் பட்டினியா, மனக்கோட்டை, நச்சுக்கோப்பை, இலட்சாதிபதி ஆகிய நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி நடித்துள்ளதுடன், பாடல்களை எழுதி இசையமைத்தும் பாடியுள்ளார். மேலும் சிலந்திவலை, மனிதமும் மிருகமும் என்னும் ஒளிநாடாக்களுக்கு இசையமைத்துள்ளதோடு பண்டத்தரிப்பு ஆலயங்கள், களபாவோடை அம்மன் ஆலயம், மயிலங்காடு கருணாகரப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்குப் பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் ஐந்திற்கும் மேற்பட்ட வயலின் இறுவெட்டுக்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மேலும் கீழும் நாடகம் 50 தடவைகள் மேடையேறியதுடன் பொற்கிளியும் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு மரபுக் கலைச்சுடர், இசைக் கவிஞன், ஞான ஏந்தல் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 114-115