ஆளுமை:சரவணமுத்துப்புலவர், மனப்புலி முதலியார்

From நூலகம்
Name சரவணமுத்துப்புலவர்
Pages மனப்புலி முதலியார்
Birth 1802
Pages 1845
Place நல்லூர்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்புலவர், மனப்புலி முதலியார் (1802 - 1845) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர், அரச சேவையாளன். இவரது தந்தை மனப்புலி முதலியார். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர், வேதாந்தச் சித்தாந்த நூல்களிலும் தெளிந்த அறிவுடையவராக விளங்கினார்.

உதயதாரகைப் பத்திரிகையில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்ததோடு வேதாந்த சுயஞ்சோதி, ஆத்துமபோதப் பிரகாசிகை, நெல்லை வேலவருலா ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 160
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 38-39
  • நூலக எண்: 963 பக்கங்கள் 110-111