ஆளுமை:சபாரத்தினம், மு.

From நூலகம்
Name சபாரத்தினம்
Birth 1921
Pages 1967
Place திருநெல்வேலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரத்தினம், மு. (1921 - 1967) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தாழையடி சபாரத்தினம் என்று அழைக்கப்பட்ட இவர், கல்கி என்னும் தென்னிந்திய சஞ்சிகையின் சிறுகதைப் போட்டியில் கலந்து மூன்றாவது பரிசினைப் பெற்றதன் மூலம் ஈழத்து இலக்கியத்தில் நுழைந்து கொண்டார். இவர் எழுதிய குருவின் சதி என்ற நூல் குருபக்தி நிறைந்த வேடுவன் கதையாக இருந்தாலும் அதன் நடையும் புதுவித பார்வையும் சிறப்பானவை ஆகும்.

இவர் சிந்திக்கத் தொடங்கினான், எனக்கும் உனக்கும், தெரிந்தால் போதும், தாய் ஆகிய சிறுகதைகளைப் புதினம் பத்திரிகையில் எழுதியுள்ளதோடு ஊமைநாடகம், ஓடமும் வண்டியும், வண்டிக்காரன், நினைவு முகம், வற்றாத ஊற்று, ஷேட், சைக்கிள், சக்கரம் முதலான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளின் தொகுப்பாக புதுவாழ்வு நூலுருவில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 72
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 37

வெளி இணைப்புக்கள்