ஆளுமை:சந்திரகுமாரன், அருளானந்தம்

From நூலகம்
Name சந்திரகுமாரன்
Pages அருளானந்தம்
Birth 1949.11.28
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகுமாரன், அருளானந்தம் (1949.11.28 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருளானந்தம். நகைச்சுவை நாடகங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ள இக்கலைஞன் அரியாலையில் நகைச்சுவைக் கலாமன்றம் அமைத்துப் பல நகைச்சுவை நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு அதில் முக்கிய பாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் மீண்டும் உடையார், மாப்(பிழை) மாமா, நடுத்தெரு ஞானப்பிரகாசம், பரியாரி பரமசிவம், கண்டறியாத கலியாணம், அமுக்கவெடி ஆறுமுகம், போன்ற நகைச்சுவை நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார். அரியாலை மண்ணில் பாரம்பரிய கலை வடிவங்களான பொய்க்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம் ஆகியவற்றை இன்று வரை மேன்னிலைப்படுத்தி வரும் இக்கலைஞர் யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் கல்விசாரா ஊழியராகப் பணியாற்றியுள்ளார்.

அரியாலை ஐக்கிய கழகம் இக்கலைஞரின் கலைப் பணியைப் பாராட்டி நகைச்சுவை நடிகர் என்ற பட்டத்தை வழங்கியது. இவர் 2005 ஆம் ஆண்டு அரியாலை சுதேஷிய திருநாட் கொண்டாட்ட நிகழ்வின் போது நாடகக் கலைஞருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 173