ஆளுமை:சந்திரகாந்தா, முருகானந்தன்

From நூலகம்
Name சந்திரகாந்தா, முருகானந்தன்
Pages மாணிக்கம்
Pages அற்புதம்
Birth 1964.01.13
Place கரணவாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகாந்தா, முருகானந்தன் (1964.01.13 - ) யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாயைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியை. இவரது தந்தை மாணிக்கம்; தாய் அற்புதம். இவர் ஆரம்பக் கல்வியை வேதாரணியேஸ்வர வித்தியாலயத்திலும் உயர் கல்வியைக் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்று மனித உரிமையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவரது முதலாவது ஆக்கமான 'இலக்கியப் படைப்புக்களில் பெண்ணியம்' 2003 ஜனவரியில் மல்லிகை இதழில் வெளியானது. தொடர்ந்து சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, மகிழ்னன், முருகானந்தன் ஆகிய புனைபெயர்களில் 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், நவமணி, சுடரொளி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், வெளிச்சம், ஜீவநதி ஆகிய சஞ்சிகைகளிலும் இடம்பெற்றன. பெண் விடுதலையும் சமத்துவமும் (2005), விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் (2007) ஆகியன இவரது நூல்கள்.

Resources

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 35-37


வெளி இணைப்புக்கள்