ஆளுமை:சத்தியபாலன், நடராசா

From நூலகம்
Name சத்தியபாலன்
Birth 1954.04.17
Place நல்லூர்
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியபாலன், நடராசா (1954.04.17 - ) யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை நடராசா. இவர் கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை எழுதுவதில் ஈடுபாடு கொண்டார். இவரின் எழுத்துத் துறைக்குச் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட அமிர்த கங்கைச் சஞ்சிகை களம் அமைத்துக் கொடுத்தது. இவரது நிறமிழக்கும் கறைகள் சிறுகதையே முதலில் பிரசுரமான சிறுகதையாகும். இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்ற புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இவரது இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் என்ற முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கலைமுகம் சஞ்சிகையில் சுவைத்தேன் என்னும் கவிதைத் தொடரைச் சௌயன்ய ஷாகர் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்..

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 31


வெளி இணைப்புக்கள்