ஆளுமை:சத்தியதாசன், கந்தையா

From நூலகம்
Name சத்தியதாசன்
Pages கந்தையா
Birth
Place தெல்லிப்பளை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியதாசன், கந்தையா யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா. 1997 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணிப் பட்டத்துடன் முதுநிலைமாணி சித்தாந்த பட்டமும் பெற்ற இவர், பயிற்சி பெற்ற விஞ்ஞான ஆசிரியராகவும் சமய பாட ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் 1999 முதல் சைவப் புலவர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இந்து சமய வினா விடை, இந்து நாகரிக வினா விடை, இந்து சமயக் கட்டுரை வினா விடை, நலம் தரும் தோத்திரம், சைவ சித்தாந்த வினா விடை போன்ற நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் அருட் சொல்வாரி, அருள் நெறித் தமிழருவி, சித்தாந்த கலாநிதி, அறநெறிக்குரு போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 57