ஆளுமை:சதாசிவம்பிள்ளை, சி. இ.

From நூலகம்
Name சதாசிவம்பிள்ளை
Birth 1893.04.22
Place புங்குடுதீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம்பிள்ளை (1893.04.22) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கவிஞன். இவர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தமையால் திரு ஆதிரையான் என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார். இளையப்பா உபாத்தியார் என அழைக்கப்பட்ட இவர் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

1953 ஆம் ஆண்டு நடைபெற்ற புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய சிலப்பதிகார விழாவிற்கு வருகை தந்த கி.வா.ஜகநாதன், ம.பொ.சிவஞானகிராமணியார், அ.ச.ஞானசம்பந்தன், ஆ.முத்துசிவன் போன்ற தமிழக அறிஞர்கள், ஈழத்து அறிஞர்கள் மத்தியில் சதாசிவம்பிள்ளைக்குப் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. அத்தோடு கலைப்பெருமன்றம் அம்பலவாணர் அரங்கில் நிகழ்ந்த கலை விழாவில் இவருக்குச் செந்தமிழ்க் கவிமணி பட்டம் வழங்கியது.

இளமை தொட்டு கவிதை இயற்றும் ஆற்றல் பெற்ற இவர், பல தனிப்பாடல்களையும் திருவூஞ்சற் பிரபந்தம், தூது, பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்களையும் பாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிரபல ஆங்கிலக் கல்லூரிகளில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப் பெறுமுன் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் பழையமாணவர் சங்கத்தினை அமைத்து இருபத்தெட்டு ஆண்டுகளாக அதன் வளர்ச்சியில் பங்காற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 205-206