ஆளுமை:சதாசிவம், தி.

From நூலகம்
Name சதாசிவம்
Birth
Place புங்குடுதீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், தி புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர். இவர் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தேறி புங்குடுதீவு இராஜேஸ்வரி வித்தியாசாலையில் 18 ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் இறுபிட்டி சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும் இறுபிட்டி அமெரிக்க மிஷனிலும் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

கல்வி, சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர், இணக்கச்சபைத் தலைவராகத் தெரிவாகிப் பல பிரச்சனைகளை நீதியோடு தீர்த்து வைத்தார். நயினாதீவு- புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சோதிட ஞானத்தில் தெளிவுடையவராக விளங்கிய இவர், நவக்கிரக நகர்வுகளுக்குப் பரம்பொருளில் திருவருளுக்கு இடையே உள்ள தாற்பரியங்களை இலக்கண சுத்தத்தோடும் சாஸ்திர நுணுக்கங்களோடு சொல்வதில் வல்லவராவார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 185