ஆளுமை:சதாசிவம், சபாபதிப்பிள்ளை

From நூலகம்
Name சதாசிவம்
Pages சபாபதிப்பிள்ளை
Pages அன்னப்பிள்ளை
Birth 1932
Pages 1986.02.15
Place வேலணை
Category கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், சபாபதிப்பிள்ளை (1932- 1986.02.15) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை; தாய் அன்னப்பிள்ளை. இவர் பாடசாலையில் பயிலுகின்ற காலத்தில் தனது கலைத்துறை சார்ந்த புலமைகளைப் பல்வேறு நிகழ்வுகளிலும் பறைசாற்றியவர். இளம்பராயத்தில் சிறந்த நாடகக் கலைஞனாக, நாடக நெறியாளனாக( அண்ணாவியார்) தன்னை வெளிக்காட்டினார்.

இவரது 'ஶ்ரீ வள்ளி', 'ஔவையார்' ஆகிய இரு நாடகங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தனது கல்வியை நிறைவு செய்ததும் யாழ்ப்பாண விவசாயத் திணைக்களத்தில் விவசாய உத்தியோகத்தவராகவும் பணியாற்றியதுடன் தமிழ் நாடு சென்று அங்கு திரு.சபா பிச்சைக்குட்டியிடம் வில்லிசையின் நுண்களையெல்லாம் பயின்று பல கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இவர் வில்லிசை விற்பன்னன், வில்லிசை மன்னன், முத்தமிழ் கலாரத்தினம் ஆகிய கெளரவங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 400-402