ஆளுமை:சதாசிவம், க.

From நூலகம்
Name சதாசிவம்
Birth 1942.03.20
Pages 2004.09.14
Place புலோலி
Category எழுத்தாளர், வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், க. (1942.03.20 - 2004.09.14) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர், வைத்தியர். இவர் டயபராத் தோட்டத்தின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

நாணயம் என்ற இவரது நாவல் வடமராட்சிப் பிரதேச மக்களின் சமூக வாழ்வியலை எடுத்துக் காட்டும் படைப்பாகும். இவரது முதல் சிறுகதை புதுவாழ்வு ஆகும். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் பேர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும் நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் இவர் எழுதியவை ஆகும். இவற்றில் இவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 214-217
  • நூலக எண்: 2038 பக்கங்கள் 32-33
  • நூலக எண்: 2068 பக்கங்கள் 04-11