ஆளுமை:சண்முகவடிவேல், சீவரத்தினம்

From நூலகம்
Name சண்முகவடிவேல்
Pages சீவரத்தினம்
Birth 1940.11.09
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகவடிவேல், சீவரத்தினம் (1940.11.09 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சீவரத்தினம். இவர் இலங்கையர்கோன், சண்முகநாதன், சி.வைத்திலிங்கம், கே. வி. செல்லையா போன்றோரிடம் கல்வி பயின்றார்.

இவர் 1956 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கி வானொலி நாடகம் எழுதுதல், மேடை நாடகம் எழுதுதல், சிறுகதை கட்டுரை எழுதுதல் ஆகிய பணிகளை ஆற்றியுள்ளார். இவர் 1968 இல் ஈழகேசரிப் பொன்னையா ஞாபகார்த்த நாடகப் போட்டி, 1974 இல் கூட்டுறவாளர் தினவிழா சிறுகதைப் போட்டி, 1976 இல் கட்டுரைப் போட்டி, வலம்புரி நிறுவனத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறுகதைப் போட்டி போன்ற போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

இவர் திருமுறைக் காவலர், திருநெறியத் தமிழ்ச்செம்மல், கலைஞானகேசரி, ஞான ஏந்தல், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15-16