ஆளுமை:சண்முகம்பிள்ளை, கதிரேசு

From நூலகம்
Name சண்முகம்பிள்ளை
Pages கதிரேசு
Pages பொன்னு
Birth 1891.05.06
Pages 1970.04.10
Place வேலணை
Category தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம்பிள்ளை, கதிரேசு (1891.05.06 - 1970.04.10) வேலணையைச் சேர்ந்த வர்த்தகர். இவரது தந்தை கதிரேசு; தாய் பொன்னு. இவர் இளமைக்காலம் தொட்டுத் தீவகத்திலிருந்து புகையிலையைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையில் இரத்தினபுரியை அண்டிய டால, நிவித்திகல ஆகிய இடங்களிற்கு அனுப்பி வியாபாரம் செய்தார். இப்பிரதேசத்தில் தமக்கெனக் கடைகளை நிறுவி வியாபாரத்தில் ஈடுபட்டார். வியாபாரத்தில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியை ஊர் மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்தமையோடு பல அறப்பணிகளையும் முன்னெடுத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 408-412