ஆளுமை:சண்முகம், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name சண்முகம்
Pages வேலுப்பிள்ளை
Birth 1910
Pages 1996
Place காரைநகர்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், வேலுப்பிள்ளை (1910- 1996) காரைநகர், பாலாவோடையைச் சேர்ந்த ஆசிரியர். இவரின் தந்தை வேலுப்பிள்ளை. இவர் காரைநகர் சுந்தரமூர்த்தி பாடசாலையிலும் காரைநகர் இந்துக்கல்லூரியிலும் கற்று மேற்படிப்பை மலேசியாவில் பெற்றார்.

1970 இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கிராம முன்னேற்றத்திற்காக உழைக்கத் தொடங்கினார். அதன் பயனாக கிராமசபைத்தலைவர் பதவியில் அமர்ந்து நற்காரியங்களை கிராமத்துக்குச் செய்தார். திக்கரை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கிடைப்பதற்காக முன்னின்று உழைத்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 372